தங்களுடன் சண்டையிட்டு வரும் ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா சபையில் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பெல்லா தலைமை அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 76 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் இதுவரையில் சுமார் 41,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.